காஷ்மீரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - குப்பைகள் தேங்கியதால் சுகாதார சீர்கேடு


காஷ்மீரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - குப்பைகள் தேங்கியதால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 2 Jan 2022 9:30 AM GMT (Updated: 2 Jan 2022 9:31 AM GMT)

காஷ்மீரில் உள்ள தோடா பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள தோடா பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வருவதாக கூறும் இவர்கள், கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணி செய்து வருவதாகவும், ஆனால் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். 

தினக்கூலியாக 7 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களை மட்டுமாவது நிரந்த ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனக்கூறி, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

Next Story