'போர் வேண்டாம், அமைதியே வேண்டும்' - மணல் சிற்பம் அமைத்து ரஷியாவிற்கு வேண்டுகோள்..!


போர் வேண்டாம், அமைதியே வேண்டும் - மணல் சிற்பம் அமைத்து ரஷியாவிற்கு வேண்டுகோள்..!
x
தினத்தந்தி 23 Feb 2022 9:43 AM GMT (Updated: 23 Feb 2022 9:43 AM GMT)

உக்ரைனில் அமைதி தேவை என்பதை குறிக்கும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் மணல் சிற்பம் ஒன்றை அமைத்துள்ளார்.

புவனேஸ்வர்,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியாவின் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் புரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இரு நாடுகளின் கொடிகளையும் சுமந்தவாறு புறாக்களை அமைத்து 'போர் வேண்டாம், அமைதியே வேண்டும்' (No war, but peace) என்ற வாசகத்துடன் அந்த மணல் சிற்பத்தை சுதர்சன் அமைத்துள்ளார். தற்போது இந்த மணல் சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story