சற்று உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.
சற்று உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.

அந்த வகையில் தங்கம் விலை நேற்று குறைந்திருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து , ஒரு கிராம் ரூ.12,000-க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.320 என குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று ஒரு கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,99,000- க்கு விற்பனையானது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும், சவரன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240

09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160

03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480

02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

01.12.2025- ஒரு சவரன் ரூ.96,560

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com