

மும்பை,
நடிகர் ரஜிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் லால் சலாம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 7, 2023 ">Also Read: