விவாகரத்துக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா - சமந்தா

விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா அமேசான் பிரைம் வீடியோ சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விவாகரத்துக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா - சமந்தா
Published on

ஐதராபாத்,

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடியின் திருமணம் 2017 இல் நடந்தது. ஆனால் சமந்தா - நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை, மேலும் 2021 இல் இந்த ஜோடி தங்கள் பிரிவை அறிவித்தனர். பின்னர் சமந்தா தனது திரைப்பட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மேலும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நாக சைதன்யாவும் படங்களில் பிசியாகவே உள்ளார்.

இந்த நிலையில் விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா அமேசான் பிரைம் வீடியோ சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவும், சமந்தாவும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் விவாகரத்து செய்த போதிலும், தங்கள் வெப் சீரிஸின் புரோஷன் பணிகளுக்காகவே தனித்தனியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com