எனக்கு கோபம் அதிகம் வரும் - நடிகை நிதி அகர்வால்

எனக்கு கோபம் அதிகம் வரும். காதலர் தினத்தில் நிறைய பேர் வாழ்த்து அட்டைகள், ரோஜா மலர்களை கொடுப்பார்கள். அவற்றை அங்கேயே கிழித்து எறிந்து விடுவேன் என்று நடிகை நிதி அகர்வால் பேட்டியில் கூறியுள்ளார்.
எனக்கு கோபம் அதிகம் வரும் - நடிகை நிதி அகர்வால்
Published on

தமிழில் ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், தொழில் அதிபரான எனது தந்தை, ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகர். எனவே எனக்கும் நடிகையாக ஆசை வந்தது. வீட்டிலும் உற்சாகப்படுத்தினர். முன்னா மைக்கேல் மூலம் இந்தி சினிமாவில் நுழைந்தேன். எனக்கு கோபம் அதிகம் வரும். காதலர் தினத்தில் நிறைய பேர் வாழ்த்து அட்டைகள், ரோஜா மலர்களை கொடுப்பார்கள். அவற்றை அங்கேயே கிழித்து எறிந்து விடுவேன். பள்ளியில் படித்தபோது என்னை பார்த்து அழகாக இருக்கிறாய் என்று சொன்ன ஒரு மாணவன் முகத்தில் கோபத்தில் ஆப்பிள் பழத்தை வீசி எறிந்து அழுதுவிட்டேன்.

இப்போது கோபத்தை தியானம் மூலம் கட்டுப்படுத்தி இருக்கிறேன். நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன். இட்லி சாம்பார் பிடித்த உணவு. ஹீரோக்கள், டைரக்டர்கள், சிறிய பேனர், பெரிய பேனர் எதையும் பார்க்க மாட்டேன். கதையை மட்டுமே நம்புவேன். என் கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் செய்வேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com