விஜயகாந்த் மறைவு: அனைத்து படப்பிடிப்புகளும் இன்று ரத்து

விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விஜயகாந்த் மறைவு: அனைத்து படப்பிடிப்புகளும் இன்று ரத்து
Published on

சென்னை,

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். திரைப்படத் தயாரிப்பாளர்களை "முதலாளி" என அன்போடு அழைத்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர்.

தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (29.12. 2023) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com