இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் ரசிகர்கள்தான் காரணமா?

யுவன் இசையில் வெளியான 'விசில் போடு' பாடல் பெரிய வரவேற்புப் பெறாத நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசை சரியில்லை என விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்துவந்தனர். இந்த சூழ்நிலையில், யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தை டெலிட் செய்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் ரசிகர்கள்தான் காரணமா?
Published on

வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அவரது தம்பி யுவன் ஷங்கர் ராஜா. வெங்கட் பிரபு விஜயுடன் இணைந்திருக்கும் 'கோட்' படத்தில் இருந்து 'விசில் போடு' பாடல் யுவன் இசையில் கடந்த 14-ம் தேதி வெளியானது. படத்தில் இருந்து வெளியாகும் முதல் பாடல் என்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், பார்ட்டி தீமில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது. 

யுவன் இசையமைத்த இந்த பாடல் நன்றாக இல்லை என்றும் அவர் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்று பல கமெண்டுகள் வந்தது. இதுவே, விஜய் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தால் பாடல் தாறுமாறு ஹிட்தான்' என்றும் இணையத்தில் ரசிகர்கள் சண்டையையும் ஆரம்பித்தனர். இப்படி, வெளியான ஒரு பாடலுக்கு யுவன் மீது நெகட்டிவிட்டி பரப்ப ஆரம்பித்து விட்டனர். இப்படியான சூழ்நிலையில்தான் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளார். 

இப்போது அவரின் பக்கமும் இன்ஸ்டாவில் வரவில்லை. அவரது பக்கம் முடக்கப்பட்டு விட்டதா அல்லது நெகட்டிவிட்டி காரணமாக அவர் தற்காலிகமாக தனது சமூகவலைதளக் கணக்கை டிஆக்டிவேட் செய்திருக்கிறாரா என்ற விவரம் தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com