பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 24 பேர் கைது

பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 24 பேர் கைது
Published on

பொள்ளாச்சி,

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000, கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரூ.1000 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், ரூ.1500 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் புதிய சட்ட விதிகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் நேற்று 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com