

மும்பை,
மராட்டியத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களில் 72 சதவீதம் பேர் பெண் குழந்தைகள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக ஆந்திராவின் திஷா சட்டத்தை போல ஒரு சிறப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார்.