மாவட்டம் முழுவதும் 1,500 மருந்து கடைகள் அடைப்பு ‘ஆன்-லைன்’ விற்பனைக்கு எதிர்ப்பு

‘ஆன்-லைன்’ மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் முழுவதும் 1,500 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 1,500 மருந்து கடைகள் அடைப்பு ‘ஆன்-லைன்’ விற்பனைக்கு எதிர்ப்பு
Published on

சேலம்,

ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சேலத்தில் 300-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளை அடைத்து மருந்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மருந்துகள் வாங்க முடியாமல் பெரிதும் அவதியுற்றனர். ஆஸ்பத்திரியையொட்டி உள்ள மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டன. ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்த நோயாளிகள் பின்னர் அவசர தேவைக்காக ஆஸ்பத்திரியையொட்டி உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி சென்றனர்.

இதனிடையே சேலத்தில் வணிகர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மருந்து வணிகர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களில் பலர் ஆன்-லைன் மருந்து வணிகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.

கடையடைப்பு போராட்டம் குறித்து வணிகர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, ஆன்-லைன் மருந்து வணிகத்தால் மருந்து வணிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் 1,500 மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏழைகளின் உயிரை விடஆன்-லைன் வர்த்தகத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பது கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக ஆன்-லைன் வணிகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com