செங்கல்பட்டு மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on

தமிழக அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களை பாராட்டும் விதமாக பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது தலா ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் 100 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்காக கலெக்டரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தகுதி வாய்ந்த 100 நபர்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com