வாக்கு எண்ணும் மையத்தில்: வெற்றிபெற்ற வேட்பாளர் விவரங்கள் தாமதமாக அறிவித்ததால் வாக்குவாதம்

மல்ரோசாபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் விவரங்கள் தாமதமாக அறிவித்ததால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்தில்: வெற்றிபெற்ற வேட்பாளர் விவரங்கள் தாமதமாக அறிவித்ததால் வாக்குவாதம்
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் பல்வேறு பதவிகளுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சியில் பதிவான வாக்குகள் அனைத்தும் மறைமலைநகர் அருகே மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நேற்று முன்தினம் 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நேற்று மதியம் 12 மணி வரை நடைபெற்றது. அனைத்து முடிவுகளும் 2 மணி அளவில் அறிவிக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிந்து பல மணி நேரமாகியும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

வாக்குவாதம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அறையை அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் பல மணி நேரம் வாக்குவாதம் செய்த காரணத்தால் இடையிடையே வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர்களை அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு வேட்பாளரின் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டனர்.

போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com