உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ‘மீம்ஸ்’ உருவாக்கும் போட்டி - கலெக்டர் தகவல்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு ‘மீம்ஸ்’ உருவாக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ‘மீம்ஸ்’ உருவாக்கும் போட்டி - கலெக்டர் தகவல்
Published on

தேனி,

புகைப்படங்களில் ஏதேனும் கருத்துக்கள் இடம்பெறச் செய்வது மீம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பல நேரங்களில் மீம்ஸ்கள் கேலி, கிண்டல் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. விழிப்புணர்வு மற்றும் கண்டன பதிவுகளாகவும் சமூக வலைதளங்களை மீம்ஸ் ஆக்கிரமித்து உள்ளது. சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தின் வெளிப்பாடாக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மீம்ஸ் உருவாக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலமாக மீம்ஸ் உருவாக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்கு எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ள மக்களின் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களை ஒதுக்குதல் மற்றும் புறக்கணித்தல் செயல்களை செய்யாமல் இருத்தல், ரத்ததானம், பால்வினை நோய் போன்றவை குறித்து மீம்ஸ் உருவாக்கலாம்.

மீம்ஸ் உருவாக்கும் போது போட்டிக்கு தொடர்பு இல்லாததையோ, சினிமா நடிகர்களின் படத்தையோ, அரசியல் மற்றும் கட்சிகளின் கொடி, சின்னம் போன்றவையோ, விலங்குகளின் படமோ, ஆபாசமான படங்கள் மற்றும் கருத்துகளோ, திரைப்பட வசனங் களோ இடம் பெறக்கூடாது. அதுபோல், எந்தவொரு கருத்தையும் நகல் எடுக்கக் கூடாது என்ற விதிமுறைகள் போட்டிக்கு வகுக்கப்பட்டு உள்ளது.

போட்டியாளர்கள் தங்களின் சுய புகைப்படத்துடன் am-e-m-e-d-ay.tnsacs gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 25-ந்தேதிக்குள் மீம்ஸ் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றிய விவரங்களுக்கு www.tnsacs.in என்ற வலைதள முகவரியிலோ அல்லது 18004191800 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்ப்பாட்டு அலகு அலுவலகத்தை அணுகியும் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com