33 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணியாற்றும் 33 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
33 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணியாற்றும் 33 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரியும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கண்ணுசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என்.சண்முகவேல் முன்னிலை வகித்தார். இதில் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் வி.மணியன், மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட செயலாளர் கே.பழனிசாமி உள்பட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com