பராமரிப்பு பணியால் மின்சார ரெயில்களில் கடும் கூட்ட நெரிசல் பயணிகள் அவதி

பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கடும் கூட்ட நெரிசல் இருந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பராமரிப்பு பணியால் மின்சார ரெயில்களில் கடும் கூட்ட நெரிசல் பயணிகள் அவதி
Published on

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் நேற்று மாட்டுங்கா - முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடந்தது. இதன் காரணமாக ஸ்லோ வழித்தட மின்சார ரெயில்கள் மாட்டுங்கா - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.-சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே பராமரிப்பு பணி நடந்தது. எனவே சி.எஸ்.எம்.டி. - வாஷி, பேலாப்பூர், பன்வெல், பாந்திரா, அந்தேரி மற்றும் கோரேகாவ் இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

இருப்பினும் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. பராமரிப்பு பணி காரணமாக குறைவான மின்சார ரெயில்களே இயக்கப்பட்டதால் ரெயில்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. அதிலும் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் அரை மணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ரெயிலில் ஏறினர். கடும் கூட்ட நெரிசல் காரணமாக பலரும் தொங்கி கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். மோட்டார்மேன் கேபினிலும் பயணிகள் தொத்தி கொண்டு இருந்ததை காண முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com