அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்

அமராவதி அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டியதால், உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்
Published on

க. பரமத்தி,

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் கரூர் மாவட்டத்தில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.

புயல்மழை தீவிரம்

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக புயல்மழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து தூவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 89.51 அடியை தாண்டியது. இரவு 11 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 5413 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் அணையின் நலன் கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படும். இதனால் கரூர் மாவட்ட கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி கரூர் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com