மங்கலம் அருகே வாய்க்குள் வண்டு புகுந்ததால் பெண் பரிதாப சாவு

மங்கலம் அருகே வாய்க்குள் வண்டு புகுந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
மங்கலம் அருகே வாய்க்குள் வண்டு புகுந்ததால் பெண் பரிதாப சாவு
Published on

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாய்க்குள் வண்டுபுகுந்தது

மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி சுகன்யா (வயது 27). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது மனைவியுடன் திருப்பூர் அருகே உள்ள சிறுபூலுவபட்டிக்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது திருமணம் நடைபெற்ற இல்லத்தில் அமர்ந்திருந்த சுகன்யா வாய்க்குள் எதிர்பாராதவிதமாக வண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு சாமளாபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பரிதாப சாவு

இந்த நிலையில் சுகன்யாவுக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென தொண்டைப்பகுதி வீக்கம் ஏற்பட்டும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அக்கம்பக்கத்தினர் சுகன்யாவை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே சுகன்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுகன்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com