நடிகர் விஜய்யிடம் ரஜினி கற்று கொள்ள வேண்டும் திரைப்பட இயக்குனர் அமீர் பேட்டி

துப்பாக்கி சூட்டில் பாதிக் கப்பட்டவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூற வேண்டும் என்பதை நடிகர் விஜய்யிடம் ரஜினி கற்று கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் அமீர் கூறினார்.
நடிகர் விஜய்யிடம் ரஜினி கற்று கொள்ள வேண்டும் திரைப்பட இயக்குனர் அமீர் பேட்டி
Published on

தாமரைக்குளம்,

கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த செந்துறைக்கு திரைப்பட இயக்குனர் அமீர் வந்தார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக செந்துறை போலீசாரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த மாதம் 9-ந்தேதி இயக்குனர் அமீருக்கு அரியலூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித் திருந்தது. இதையடுத்து அரியலூர் நீதிமன்றத்தில் நேற்று அமீர் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, வழக்கை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் அமீர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பேச்சு உரிமையை பறிக்க அரசு முயற்சி செய்கிறது. எங்களை போன்றவர்களை அச்சுறுத்தும் வகையில், அவதூறு வழக்குப்பதிவு செய்வதை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச போவதில்லை. மக்களின் நலனுக்காக சட்டத்திற்கு உட்பட்டு பேசுவதை நிறுத்த வேண்டாம் என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் நீதிபதி லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். பேச்சுரிமை என்பது சட்டப்படி அனை வருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூற வேண்டும் என்பதை நடிகர் விஜய்யிடம் நடிகர் ரஜினி கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com