ரூ.1 கோடியே 32 லட்சம் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 5 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

ரூ.1 கோடியே 32 லட்சம் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 5 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ரூ.1 கோடியே 32 லட்சம் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 5 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
Published on

மும்பை,

மும்பையில் இருந்து வெளிநாட்டுக்கு தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பார்சல் மூலம் ஆயத்த ஆடைகள் அனுப்பி வந்தது. அந்த நிறுவனம் போலியான ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில், அந்த நிறுவனம் ரூ.1 கோடியே 32 லட்சம் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த நிர்வாக அதிகாரிகளான சிங், ஆதித்யா சிங், ரந்தி சிங், பரிமளா சிங், சூர்யவன்சி, ஜனு, ஜார்ஜ் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக சுங்கவரித்துறை அதிகாரி நாயர் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான விசாரணை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சூர்யவன்சி, ஜேனு ஆகிய 2 பேர் இறந்துவிட்டனர். வழக்கு விசாரணை நிறைவில், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த 5 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

சுங்கவரித்துற அதிகாரி நாயர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com