குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
Published on

விழுப்புரம்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பும், இவற்றுடன் குடும்பத்துக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பும் அதனுடன் ரூ.1,000 வழங்குவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், குடும்ப அட்டைதாரர்கள் எந்தவித சிரமமும் இன்றி ரேஷன் கடைகளுக்கு சென்று சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ள தெரு வாரியாக நாள் குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும். இதனை சப்-கலெக்டர்கள், துணை ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர்கள் ஸ்ரீகாந்த், மெர்சிரம்யா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் பாலகிருஷ்ணன், மலர்விழி, வேளாண் இணை இயக்குனர் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com