மும்பை, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 2¾ லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

மும்பை மற்றும் ஐதராபாத்தில் இருந்து 2¾ லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
மும்பை, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 2¾ லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
Published on

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக இருப்பதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து பிரதமா மோடி உத்தரவின் பேரில், மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கோவக்சின் தடுப்பு மருந்துக்கு பல இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளதால் அதிக அளவில் அனுப்பி வைக்க தமிழக அரசு கோரியது. இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் டோஸ் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் 16 பார்சல்களை ஏற்றிக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து சேர்ந்தது.

சென்னை விமானத்தில் இருந்து வந்து இறங்கிய தடுப்பூசி மருந்து பார்சல்களை இறக்கி கன்டெய்னா வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மருத்துவ தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து, நேற்று மதியம் மும்பையில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தன. இந்த தடுப்பூசிகளும் அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பூசி தேவைப்படும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அவை பிரித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com