குரூப்-2 தேர்வுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப்-2 தேர்வுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.
குரூப்-2 தேர்வுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள குரூப்-2 தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூ ரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணைய அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள குரூப்-2ல் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு 4 மையங்களில் 5 ஆயிரத்து 986 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்வுக்கு 21 முதன்மை கண்காணிப்பாளர், 4 நடமாடும் குழுக்கள் மற்றும் 2 பறக்கும்படை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தேர்வு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தேர்வு நடை பெறும் நாளன்று போட்டித்தேர்வாளர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகளும், தேர்வு நடை பெறும் மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மேலும் தேர்வு எழுதுவோர் எந்தவித இடையூறும் இன்றி தேர்வு எழுத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் உறுதுணையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் மற்றும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com