

மணப்பாறை,
முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி வழங்கினர். இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 486 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. மாடுகளை அடக்க 198 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை மருத்துவக்குழுவினரும், வீரர்களை மருத்துவக் குழுவினரும் பரிசோதனை செய்தனர். பின்னர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்க முயன்றனர்.
அப்போது பல காளைகளை அதன் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் திமிறிக்கொண்டு பாய்ந்து ஓடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித் தள்ளியதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, ஆர்.சந்திரகேர் எம்.எல்.ஏ., மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமி மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.
மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.