பாளையங்கோட்டையில் ரெயில்வே மேம்பால இணைப்பு பணி மும்முரம்

பாளையங்கோட்டை மகராஜநகரில் ரெயில்வே மேம்பால இணைப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
பாளையங்கோட்டையில் ரெயில்வே மேம்பால இணைப்பு பணி மும்முரம்
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை மகராஜநகர் வழியாக நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இதில் ரெயில் போக்குவரத்தின்போது, மகராஜநகரில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படுவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையொட்டி தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், தண்டவாளத்தின் இருபுறமும் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி முடிக்கப்பட்டது. நடுவே தண்டவாளத்தின் மேல் பகுதியில் இணைக்கும் பகுதியை மட்டும் மத்திய ரெயில்வே கட்டுமான பிரிவு செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் இந்தப்பணி மட்டும் தொடங்கப்படவில்லை. இதனால் பாலம் அந்தரத்தில் தொங்குவது போன்று காட்சி அளித்தது. அங்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்வதிலும் தாமதம் நீடித்து வந்தது

இந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளும் முடிக்கப்பட்டு, கொரோனா ஊரடங்கு தளர்வும் கிடைத்துள்ளதால், ரெயில்வே துறை சார்பில் தற்போது ரெயில்வே மேம்பால இணைப்பு பணியை தொடங்கியுள்ளனர். தண்டவாளத்தின் இருபுறமும் தலா 3 தூண்கள் அமைத்து, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலத்துடன் இணைக்க உள்ளனர். இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியை 3 மாதங்களில் நிறைவேற்றி, போக்குவரத்திற்கு திறந்து விட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com