தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.
தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை-சேலம் இடையே எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமலும், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமலும், சொந்த ஆதாயம் பெறுவதற்காக, இந்த திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக இருக்கின்றனர். அதுவும் கொரோனா ஊரடங்கால், மக்கள் போராட இயலாததை சாதகமாக்கிக்கொண்டு, இந்த திட்டத்தை நிறைவேற்ற முயலுவது மோசமான முன்னெடுப்பு ஆகும். இதனை அரசு கைவிட வேண்டும். மக்கள் மீண்டும் போராடினால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.

ஊரடங்கால் சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்கும் எந்த திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. விவசாயிகள், சிறு குறு நிறுவனங்களுக்கு எந்தவித நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வராமல் தடுக்க வேண்டும்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம் ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.22 ஆயிரம் வரையிலும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனாலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களிடம் கூடுதலாக பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனை அரசு கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com