

ஜோலார்பேட்டை,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் மா, பலா, வாழை போன்ற முக்கனிகள் விளையும் இடமாகவும், மூலிகை செடிகள் வளரும் இடமாகவும் உள்ளது. அத்துடன் நரி, மலைப்பாம்பு, குரங்கு ஆகிய விலங்குகளும் ஏலகிரிமலையில் வாழ்ந்து வருகின்றன. ஏற்கனவே ஏலகிரி கிராம மலையடிவாரத்திலும், மண்டலவாடி அருகில் உள்ள மலைக்கும் மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு பொன்னேரி அருகில் உள்ள மலையில் மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். அதில் தீ மள மளவென எரிந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது. இதனால் ஏலகிரி மலை அடிவாரம் அருகில் உள்ள வீடுகளின் மேற்கூரை மற்றும் மாடி வீட்டின் மேல்பகுதி, வாசல்களில் சாம்பல் விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு விட முடியாமல் திணறினர்.