திருவண்ணாமலையில் உள்ள அறிவியல் பூங்காவுக்குள் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது - கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தகவல்

திருவண்ணாமலையில் உள்ள புதிய அறிவியல் பூங்காவுக்குள் 10 வயதுக் குட்பட்டவர்கள், 65 வயது மேற்பட் டவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அறிவியல் பூங்காவுக்குள் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது - கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தகவல்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிகால் ஊராட் சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஏரிக்கரை ஓரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக மாநில நிதி குழு, ஊராட்சி ஒன்றிய பொதுநிதி, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நல நிதி, சமூக பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள புதிய அறிவியல் பூங்கா பொதுமக்களுக்கு திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வை யிட்டார். முன்னதாக, கலெக் டர் தலைமையில் சிறப்புப் பூஜைகள் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. அப்போது பூங்காவுக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் அவர் நலம் விசாரித்தார். அங்கிருந்த பள்ளி குழந்தைகளுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் அவர், ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், உணவுக்கூடம், அறிவியில் உபகரணங்கள் உள்பட அனைத்து இடங்களையும் நேரில் பார்வையிட்டார்.

பூங்காவில் அமைக்கப் பட்டுள்ள திறந்தவெளி அரங் கத்தில் நடந்த பள்ளி மாணவர் களின் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி, சிலம்பாட்டம், பறை யாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டார். முடிவில் ஏரிக்கரை அருகில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறிய தாவது.

திருவண்ணாமலை வேங்கி காலில் அமைக்கப் பட்டுள்ள அறிவியல் பூங்காவை பார் வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதி நேரம் காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலும் ஆகும். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

பூங்காவுக்கு வரும் அனை வருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பிறகு அனுமதிக்கப் படு வார்கள். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூங்காவுக்குள் வர அனுமதி கிடையாது.

கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் பூங்காவுக்குள் வர அனுமதி கிடையாது. பொதுமக்கள் தங்களுக்கான குடிநீரை உடன் எடுத்து வர வேண்டும். பூங்காவுக்குள் உணவுப் பொருட்கள் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜீதா பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், பழனி மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com