கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை

கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுட்டெரித்த வெயில்

கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து மதியம் வெயில் அடித்தது. பின்னர் லேசான மழை பெய்தது. சற்று நேரத்தில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பலத்த மழை

தொடர்நது 1 மணிநேரத்திற்கு மேலாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை, மேலநத்தம், கன்னியாகுறிச்சி, பாளையக்கோட்டை, புதுக்குடி, ராதாநரசிம்மபுரம், கோவிந்தநத்தம், ராஜகோபாலபுரம், தென்பரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com