ராஜ் தாக்கரேயுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

மும்பையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை லதா ரஜினிகாந்த் சந்தித்தார்.
ராஜ் தாக்கரேயுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு
Published on

மும்பை,

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று மும்பை வந்திருந்தார். பின்னர் தாதரில் உள்ள மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயின் கிருஷ்ணா குஞ்ச் இல்லத்துக்கு லதா ரஜினிகாந்த் சென்றார். அங்கு ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி ஷர்மிளா தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

லதா ரஜினிகாந்த் உடனான இந்த சந்திப்பு குறித்து ராஜ் தாக்கரே, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிவித்து இருக்கிறார். அத்துடன் உரையாடலின் போது எடுத்த படங்களையும் ராஜ் தாக்கரே பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க ஆயத்தமாகி வரும் நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com