திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்

திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்
Published on

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் கொசவம்பாளையம் என்ற இடத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் ரூ.90 ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, அவர் கோவையை சேர்ந்த இளமதி என்பதும், குளிர்பானங்கள் விற்ற பணத்தை எடுத்து வந்ததும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருச்செங்கோடு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com