விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட மானியம் நாராயணசாமி ஒப்புதல்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடுவதற்கான மானியத் தொகைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட மானியம் நாராயணசாமி ஒப்புதல்
Published on

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபின் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான தொகையை வேளாண்துறையானது மின்துறைக்கு செலுத்தி விடும்.

இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் மேலாண்மையை பெருக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், அரசு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்கிற திட்டத்தின் மூலமாக இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

மானியத்தொகை

கடந்த 2017-18ம் ஆண்டு காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 623 விவசாயிகளின் மின் மோட்டார் களுக்கான 3-வது மற்றும் 4-வது காலாண்டுகளுக்கு மானியத்தொகையான ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 37 மற்றும் 2018-19 ஆண்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 139 விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கான 4 காலாண்டுகளுக்கான மானியத்தொகை ரூ.3 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரத்து 366 என மொத்தம் ரூ.3.53 கோடியினை வேளாண்துறை மூலமாக மின்துறைக்கு வழங்குவதற்கான செலவின ஒப்புதலை முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார்.

இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 762 விவசாயிகளின் நலன் அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com