வாணியம்பாடி அருகே 5 பேரை கடித்து குதறிய சிறுத்தை ஆந்திர காட்டுக்குள் தப்பி சென்றதா? தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் தீவிரம்

வாணியம்பாடி அருகே 5 பேரை கடித்து குதறிய சிறுத்தை ஆந்திர காட்டுக்குள் தப்பி சென்றதா? என்று வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே 5 பேரை கடித்து குதறிய சிறுத்தை ஆந்திர காட்டுக்குள் தப்பி சென்றதா? தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் தீவிரம்
Published on

வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் அருகே நாகலேரி வட்டம் பகுதியில் உள்ள கரும்புத்தோட்டத்தில் சிறுத்தை புகுந்தது. அங்கு அலமேலு என்ற பெண் மாட்டுத்தீவனம் எடுக்க சென்றார். அப்போது சிறுத்தை சத்தமிட்டது. இதனால் திடுக்கிட்ட அவர் ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற அலமேலு உள்பட 5 பேரை சிறுத்தை கடித்து குதறியது. காயம் அடைந்த அனைவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகளை கொண்டு வந்து, அதில் மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைத்தனர். மேலும் மயக்க மருந்து ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

வனத்துறையினர் மயக்க ஊசியுடன் 3 நாட்களாக தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்று காலை கரும்பு தோட்டம், முட்புதர்களில் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை,

அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர எல்லைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. சிறுத்தை அங்கு சென்று இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com