கோடை விடுமுறைக்கு பிறகு 3-ந் தேதி திறப்பு: பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறைக்கு பிறகு 3-ந் தேதி திறப்பு: பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
Published on

சேலம்,

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 3-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டில் வழங்குவதற்கான புதிய பாடப்புத்தகங்கள் கல்வித்துறை மூலம் சென்னையில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து சேலம் நகரம், சேலம் ஊரகம், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர் ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் வாரியாக பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் சரிபார்க்கப்பட்டு அங்கிருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பள்ளியில் இருந்து வாகனங்கள் மூலம் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். அந்தந்த பள்ளிகளில் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் தங்களது மாணவ-மாணவிகளின் விவரத்தை அதிகாரிகளிடம் கொடுத்து அதற்கு ஏற்ப பாடப்புத்தகங்களை வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com