படப்பை அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டிக்கொலை

படப்பை அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
படப்பை அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டிக்கொலை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் தீபக்ராஜ் (வயது 25). இவர் குன்றத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த திங்கட்கிழமை மாலை தன்னுடைய நண்பரின் தங்கை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குன்றத்தூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன தீபக்ராஜ் படப்பையை அடுத்த எருமையூர் கிஷ்கிந்தா அருகே வயல்வெளி பகுதியில் முட்புதர்கள் அடர்ந்த இடத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் தலை, முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார் தீபக்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீபக்ராஜை மர்மநபர்கள் யாரேனும் கடத்தி சென்று வெட்டி கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com