

இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோருக்கு சமூக அமைப்புகள் சார்பில் ரூ.201 பொங்கல் பரிசு மணியார்டர் அனுப்பும் போராட்டம் முதலியார்பேட்டை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.
போராட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், சிந்தனையாளர் பேரவை செல்வம், தமிழர் களம் அழகர், ஆம் ஆத்மி ரவி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.