

கன்னியாகுமரி,
ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்கள் அனிதா படேல், கைலாஸ் திரிவேதி, நரேந்திர நாதர், ஓம்பிரகாஷ் கவுதாலா ஆகிய 4 பேரும் நேற்று குடும்பத்தினருடன் கன்னியாகுமரி வந்தனர்.
அங்கு அவர்கள் விவேகானந்த கேந்திராவில் தங்கி ஓய்வெடுத்தனர். பின்னர் படகு மூலம் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றனர். அங்கு ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.
சாமி தரிசனம்
முன்னதாக எம்.எல்.ஏ.க்களை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் மற்றும் பலர் வரவேற்றனர். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களை கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் வரவேற்று கோவிலின் பெருமைகள் குறித்து பேசினார். விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவையொட்டி ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்கள் கன்னியாகுமரி வந்ததாக தெரிகிறது.