காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.1 கோடியே 15 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 84 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.1 கோடியே 15 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
Published on

வாகன சோதனை

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் தாசில்தார் தலைமையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் சுழற்சி அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப்பணம், பட்டு சேலைகள், தங்கநகைகள், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 410, இதர பொருட்கள் ரூ.1 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரத்து 921 மற்றும் ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 640 மதிப்புள்ள மதுபாட்டில்கள் என மொத்தம் ரூ.6 கோடியே 44 லட்சத்து 971 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதில், ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 84 மற்றும் இதர பொருட்கள் உரியவர்களிடம் ஒபபடைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com