கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக வேளாங் கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரனுக்கு தகவல் வந்தது.

பறிமுதல்

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் தலைமையில் அலுவலக பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com