தனது படத்தை வரைந்து அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

தனது படத்தை வரைந்து அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவனை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
தனது படத்தை வரைந்து அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் பர்பானியை சேர்ந்த சிறுவன் அஜய். 6-ம் வகுப்பு படிக்கும் அஜய்க்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். எனவே சிறுவன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வரைந்து அவருக்கு அனுப்பினான்.

பிரதமருக்கு அவன் எழுதிய கடிதத்தில் எனக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம். எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக விளங்கி உங்களை போல் நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்பது என் ஆசை என தெரிவித்திருந்தான்.

பிரதமரிடமிருந்து பதில் வராது என நினைத்திருந்த சிறுவனுக்கு பிரதமரிடமிருந்து கடிதம் வந்தது. அதில், பிரதமர் மோடி கூறியிருந்ததாவது:-

உன் ஓவிய திறமை என்னை வியக்க வைத்துள்ளது. நம் எண்ணங்களை வெளிப்படுத்த ஓவியம் மிகச் சிறந்த கருவி. இந்த அரிய கலையை நீ மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன் எண்ணத்துக்கும் சிந்தனைக்கும் பாராட்டுக்கள். நாடு மற்றும் சமூக நலனுக்கு உன் ஓவியத் திறமையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com