சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு கடினம்: இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் கோரிக்கை

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடந்த இயற்பியல் பொதுத்தேர்வு கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு கடினம்: இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் கோரிக்கை
Published on

பெங்களூரு,

இந்தியா முழுவதும் 12-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 7-ந் தேதி இயற்பியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக வினாத்தாளில் சி பிரிவில் இடம்பெற்று இருந்த 3 மதிப்பெண் கேள்விகளுக்கு யோசித்து பதில் அளிக்கும் வகையில் கடினமாக இருந்தது. மேலும், கடந்த 5-ந் தேதி ஆங்கில தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, இயற்பியல் தேர்வுக்கு முறையாக தயாராவதற்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. ஒருநாள் விடுமுறைக்கு பின்னர் மாணவ-மாணவிகள் இயற்பியல் தேர்வு எழுதினார்கள்.

கருணை அடிப்படையில்...

இந்த நிலையில், சி.பி.எஸ்.சி. மாணவ-மாணவிகள் தங்களுக்கான இயற்பியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததை வெளிப்படுத்தும் வகையிலும், இயற்பியல் விடைத்தாளை ஆசிரியர், ஆசிரியைகள் கருணை அடிப்படையில் திருத்த வேண்டும் எனவும், கடந்த முறை பின்பற்றிய மிதமான திருத்தம் முறையை அவர்கள் இந்த ஆண்டும் கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை அவர்கள் ch-a-n-ge.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த இணையதளத்தில் இதுவரை மொத்தம் 81 ஆயிரத்து 501 பேர் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com