

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவர் கஞ்சா விற்ற வழக்கில் கடந்த மார்ச் மாதம் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவருக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறை ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கைதி சீனிவாசன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி சீனிவாசன் நெஞ்சு வலியால்தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.