கரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாருடன், சூப்பிரண்டு ஆலோசனை

கரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாருடன், சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.
கரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாருடன், சூப்பிரண்டு ஆலோசனை
Published on

கரூர்,

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கடந்த மாதத்தில் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த திருட்டு, வழிப்பறி, கொலை உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் மற்றும் விபத்துகள் உள்ளிட்டவை பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் குற்ற சம்பங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாகன சோதனையின் போதும், திருடர்களை பிடிக் கும் போதும், பழைய குற்றப்பதிவேடுகளை பின்பற்றி காப்ஸ் ஐ செயலியை பயன்படுத்தி புலன் விசாரணையை மேற்கொள்வது குறித்தும் அறிவுறுத்தினார்.

மேலும் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து அந்த வழக்கில் துப்பு துலக்கியவர்கள், நீதிமன்ற பணி, போலீஸ் நிலைய அலுவலக பணி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி உள்ளிட்டவற்றை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். இந்த கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கும்மராஜா (கரூர் டவுன்), முத்தமிழ்செல்வன் (புறநகர் பகுதி), சுகுமார் (குளித்தலை), சிற்றரசு (ஆயுதப்படை) மற்றும் தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசு உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com