கிருஷ்ணகிரி அணையில் புதிய ‘ஷட்டர்’ அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது

கிருஷ்ணகிரி அணையில் புதிய ‘ஷட்டர்’ அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அணையில் புதிய ‘ஷட்டர்’ அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகில் முதல் ஷட்டர் கடந்த 29-ந் தேதி உடைந்தது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதை கலெக்டர் கதிரவன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி அணையில் கடந்த மாதம் மதகு ஷட்டர் உடைந்த நிலையில், உடைந்த ஷட்டர் முழுமையாக அகற்றப்பட்டு தற்போது புதிய ஷட்டர் தற்காலிகமாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிக்கப்படும்.

தொடர்ந்து 3 நாட்களில் பெயிண்டிங் மற்றும் வெல்டிங் பணிகள் முடிக்கப்பட்டு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கும் பணிகள் தொடங்கும். தற்போது அணைக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் 120 கன அடி ஆற்றிலும், 180 கனஅடி கால்வாயில் திறந்து விடப்படுகிறது. மேலும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அணையில் 42 அடி அல்லது 44 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

தற்போது ஆற்றிலும், விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் விருப்பப்பட்டால் அணையில் நீரை தேக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இது குறித்து விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) குமார் மற்றும் உதவிபொறியாளர் சையது மற்றும் பொதுபணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com