

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும், கல்லூரி மாணவர்கள், மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சியும் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராசா முன்னிலையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 80-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். முரசொலி அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல்வேறு அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொள்கை பரப்பு செயலாளர் வங்கி வரை வோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங் கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைசாமி, ராஜ்குமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், நகரசெயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செய லாளர்கள் அண்ணாதுரை, மதியழகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.