திட்ட மறுஆய்வு கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது

புதுவை மாநில திட்ட மறுஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
திட்ட மறுஆய்வு கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது
Published on

புதுச்சேரி,

2019-20ம் நிதியாண்டு முடிய உள்ள நிலையில் புதுவை மாநில திட்ட மறுஆய்வு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

விரைவாக செலவிட...

இந்த கூட்டத்தில் கடந்த பட்ஜெட்டில் துறைவாரியாக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? எந்தெந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்டது? என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் விளக்கினார்கள்.

துறைகளில் தற்போது செலவிடப்படாமல் உள்ள நிதி குறித்தும், அவற்றை விரைந்து செலவிடவும் அதிகாரிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com