தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
Published on

தர்மபுரி,

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான் அறிவுறுத்தினார்.

தர்மபுரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில் மாவட்ட கண்காணிப்புகுழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லா கான் தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா முன்னிலை வகித்தார்.

இதில், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலகம் மூலமாக தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், நலத்திட்ட உதவிகள் தொழிலாளர்களுக்கு விரைவாக கிடைக்க உரிய நடவடிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்க வேண்டும். பிற துறைகளில் தடையின்மை சான்றிதழை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மகப்பேறு நிதியுதவி, திருமண நிதியுதவி, இயற்கை மரண நிதியுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களை உரிய ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, தனி துணை கலெக்டர் அஜய் சீனிவாசன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com