திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லூரி துணைத்தலைவர் எ.வ.குமரன் தலைமை தாங்கினார். முதல்வர் ஜி.மோகன்குமார், செயலாளர் ம.புர்க்கிந்த்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து குத்துவிளக்கு ஏற்றினர். முகாமில் சுமார் 30 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர். அந்த நிறுவனங்களின் தேர்வு அதிகாரிகளுக்கு நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

இதில் கலந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் காலை முதலே வந்திருந்தனர்.

மேலும் கல்லூரியின் சார்பில் முக்கிய இடங்களில் இருந்து போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், டிப்ளமோ, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளை படித்த இளைஞர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் கல்லூரி செயலாளர் புர்க்கிந்த்ராஜ் பேசுகையில், இந்த முகாம் நடப்பதற்கு காரணம் கல்லூரி துணைத்தலைவர் எ.வ.குமரன். ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த முகாம், இந்தாண்டு கல்லூரியின் பொன்விழாவின் சிறப்பம்சமாக நடத்தப்படுகிறது. பின் தங்கிய மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் முன்னேறவும், அந்த மாவட்டம் முன்னேறவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதேபோல அடுத்த ஆண்டும் இதைவிட பெரிய அளவில் இந்த முகாம் நடத்தப்படும். அதில் கூடுதலான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி அங்கப்பன், ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com