அவசர பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

அவசர பயணம் மேற்கொள்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் வினய் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அவசர பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
Published on

மதுரை,

கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக 144 தடை உத்தரவு சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் திருமணம், இறப்பு போன்ற சமூக நிகழ்வுகளுக்காகவும், அவசர மருத்துவ தேவைகளுக்காகவும் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையரிடம் (கலால்) விண்ணப்பித்து பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே அவசர பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தற்போது புதிதாக இதற்கென உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட ஆன்லைன் இணையதளத்தின் ( http//madurai.nic.in ) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும். இது குறித்து விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரரே ஆன்லைனிலே அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் கூடுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com