மணப்பாறை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

மணப்பாறை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாறை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
Published on

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியைச் சேர்ந்தவர் குமாரராஜா. இவர், 2 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வந்தார். அந்த காளைகள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று பல பரிசுகளை அதன் உரிமையாளருக்கு பெற்று தந்துள்ளன. அவற்றில் ஒரு காளை வயது முதிர்வின் காரணமாக நேற்று மதியம் செத்தது. பின்னர் அந்த காளைக்கு மனிதர் இறந்தால் என்ன சடங்குகள் செய்யப்படுமோ அதுபோல செய்து ஊர்வலமாக தூக்கி சென்றனர்.

அடக்கம்

பின்னர், அந்த காளை குமாரராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக தேவராட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com